SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

  1. 1d ago

    அறிவியல் துறையில் அதி உயர் விருது பெற தேர்வாகியுள்ள தமிழர்

    ஆஸ்திரேலியாவின் முதன்மையான அறிவியல் விருதுகளில் ஒன்று, யூரேகா பரிசு. 19 பிரிவுகளில் ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் வழங்கும் யூரேகா பரிசுகளுக்கான இறுதிப் போட்டியில் 58 போட்டியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் யூரேகா பரிசுகளின் வெற்றியாளர்கள் செப்டம்பர் 3ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று சிட்னி நகர மண்டபத்தில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படுவார்கள். இறுதிச் சுற்றிலுள்ள போட்டியாளர்களில் ஒரு தமிழரும் அடங்குவார். CSIRO என்ற தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் கிருஷ்ணன் முருகப்பனுடன், இந்த விருதுக்குத் தேர்வாகியிருப்பது குறித்தும், அவரது ஆராய்ச்சி முயற்சிகள் குறித்தும், அவரது பின்னணி குறித்தும் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  2. 1d ago

    பூர்வீகக்குடி மக்களின் கலாச்சாரத் திருவிழா, Garma, என்றால் என்ன?

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவின் வடக்கே அமைந்துள்ள Arnhem Land பகுதியில் நடைபெறும் Garma திருவிழா ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பூர்வீகக் குடிமக்களின் கலாச்சாரக் கூடமைப்பாகும். இந்த விழா Yolŋu மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை நான்கு நாட்கள் கொண்டாடும் முக்கிய நிகழ்வாக விளங்குகிறது. மேலும், பூர்வீகக் குடி மக்களைப் பாதிக்கும் சமூக, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த உரையாடல்களுக்கான ஒரு முக்கிய மன்றமாகும். இந்த ஆண்டின் கருப்பொருள், 'அனைவரும்' என்று பொருள்படும் ‘Bukmak’ ஆகும். இது குறித்து, Sydney Lang மற்றும் Tee Mitchell எழுதிய விவரணத்தை, SBSதமிழ் ஒலிபரப்பின் செய்தியின் பின்னணிக்காகத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Ratings & Reviews

4.3
out of 5
8 Ratings

About

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

More From SBS Audio

You Might Also Like