SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

  1. 11h ago

    விலைவாசி முதல் வட்டிவீத உயர்வு வரை: என்ன நடக்கிறது ஆஸ்திரேலியாவில்?

    ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் அதிகரித்து வருவதுடன், வாழ்க்கைச் செலவுகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதற்கிடையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வரும் நிலையில் வீட்டுக் கடன் வைத்திருக்கும் குடும்பங்களும் வணிக நிறுவனங்களும் கூடுதல் பொருளாதாரச் சுமையைச் சந்திக்கின்றன.இந்தப் பொருளாதாரச் சூழலுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் எந்த அளவுக்குப் பயனளிக்கின்றன? என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேலியாவின் CA CPA, மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக பல பொருளாதார கட்டுரைகளை எழுதியுள்ள கோவிந்தராஜன் அப்பு அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்

  2. 16h ago

    வீடு வாங்க வசதி இல்லையா? ஒருவேளை அது உங்களுக்குச் சாதகமான ஒன்றாக இருக்கலாம்

    நீங்கள் விரும்பும் இடத்தில் வீடு வாங்குவதற்குப் போதிய வசதி இல்லாததால், வாடகை வீட்டில் வசிக்கும் இலட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களில் ஒருவராக நீங்களும் இருக்கலாம். இத்தகைய சூழலில், வேகமெடுத்துக்கொண்டே இருக்கும் ஒரு பந்தயத்தில் நீங்கள் பின்தங்கியிருப்பதாக உணரக்கூடும். ஆனால், முற்றிலும் மாறியுள்ள தற்போதைய பொருளாதாரச் சூழலில், நம் வாழ்வின் சில கட்டங்களில், வீடு வாங்குவதை விட வாடகை வீட்டில் வசிப்பதே நிதிப் பாதுகாப்பிற்கான சிறந்த வழியாக இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகச் சில நிபுணர்கள் கூறுகின்றனர். Camille Bianchi மற்றும் Kerrin Thomas ஆகியோர் எழுதிய விவரணத்தின் அடிப்படையில், இது குறித்து குலசேகரம் சஞ்சயன் தமிழில் முன்வைக்கும் செய்தியின் பின்னணி இது. #sbsaudiopodcastCan't afford to buy a home? You might just be better off

  3. 17h ago

    குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் சவால்கள் என்ன? எப்படிச் சமாளிப்பது?

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் வாழ்க்கையில் தொழில்நுட்பமும் சமூக ஊடகங்களும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளன. குழந்தைகள் எதிர்கொள்ளும் மனரீதியான சவால்களைப் பெற்றோர் எவ்வாறு அடையாளம் காணலாம் என்று குழந்தை வளர்ப்பு தொடர்பாக விளக்குகிறார் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையவழி ஆலோசனை சேவைகளை வழங்கி வருகின்ற Mind Matterz Counselling mind-matterz-counselling.netlify.app நிறுவனர் இளவரசி ராஜா அவர்கள். Australian Counselling Association-இன் பதிவு பெற்ற ஆலோசகரான இளவரசியுடன் பிரிஸ்பேனில் உள்ள 4EB தமிழ் ஒலி வானொலி நிலையத்தில் SBS தமிழ் ஒலிபரப்புக்காக உரையாடியவர் றைசெல். #sbsaudio podcastWhat challenges do parents face in raising children, and how can they overcome them?

  4. 20h ago

    ஆஸ்திரேலியாவில் இந்துக் கல்வி மற்றும் கலாசார மையத்திற்காக 'உள்-அகம்'

    Shivam School of Danceஇன் புதிய கலைப் படைப்பாக்க முயற்சியே Shivam Dance Creative(SDC) ஆகும். இம்மாதம் 7ஆம் திகதி, SDC தனது முதலாவது கூட்டு நடனப் படைப்பான 'உள்ளகம்' எனும் தனித்துவமான கருப்பொருள் சார்ந்த நடன நிகழ்ச்சியை மேடையேற்றவுள்ளது. இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, கலாசேத்ரா நிறுவனத்தின் முன்னாள் மாணவியும், இந்தியாவில் இயங்கி வரும் Dakshina Dance Ensemble நடனக் குழுவின் கலை இயக்குநருமான திவ்யா நாயர் அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிட்னிக்கு வருகை தந்துள்ளார். Divya Nayar, Shivam School of Danceஇன் இயக்குனர் Saipriya Rahulan, மற்றும் Sumathi Navaratnam ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். 'உள்ளகம்' நடன நிகழ்வு: காலம்: சனிக்கிழமை, 7ம் திகதி நவம்பர் 2026. நேரம்: 3:30pm, 6:30pm இடம்: Tom Mann Theatre, Surry Hills. மேலதிக விவரம்: SHIVAM DANCE CREATIVE. Saipriya Rahulan - 0415 066 252. #sbsaudiopodcast'Ull-Agam' for Hindu Education & Cultural Centre

Ratings & Reviews

4.3
out of 5
8 Ratings

About

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

More From SBS Audio

You Might Also Like